வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது: ஊடக பிரதியமைச்சர்

🕔 October 12, 2016

parana-vithana-011டமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று  ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார்.

அரசியல் ரீதியான காரணங்களுக்காக பாதுகாப்புக் கோரினால் வழங்கப்பட வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, இதனை அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும்,  எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அண்மைக்காலமாக பலரும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. உண்மையிலேயே அவருக்கு பாதுகாப்பு வேண்டுமா என்று அரசாங்கம் கவனம் செலுத்தும்.

அவ்வாறு அச்சுறுத்தல் உள்ளது உண்மையானால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தும்.

ஆனால், வெறும் அரசியல் தேவைகளுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ பாதுகாப்பு கேட்கப்படுமானால் அதை அரசு பெற்றுக்கொடுக்காது” என்றார்.

Comments