திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு

🕔 October 12, 2016

Hakeem - 9544தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருட்டுத்தனமாக, உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தாமல் எழுத்து மூல முன்மொழிவொன்றினை தயாரித்துள்ளமை தொடர்பில், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அண்மையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் செயலர்வு ஒன்றினை நடத்தியது. இதன்போது, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக அந்தக் கட்சியின் முன்மொழிவொன்று வெளியிடப்பட்டது.

ஆனால், குறித்த முன்மொழிவினை தயார் செய்யும் பொருட்டு, மு.காங்கிரசின் உயர்பீடத்தில் அனுமதி பெறப்படவில்லை என்றும், உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில், கட்சியிலுள்ள ஒரு சிலர் கூடி, யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக மேற்படி தேர்தல் முன்மொழிவினை தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு.கா.வின் மேற்படி தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கண்டி மாவட்டத்துக்கு இரண்டு மேலதிக நாடளுமன்ற உறுப்பினர் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மேலதிகமாக 04 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.election-reform-slmc-01 election-reform-slmc-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்