
– க. கிஷாந்தன் –
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயமடைந்துள்ளனர்.
தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் வண்டி, தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயங்களுக்குள்ளாகியவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிக்சைகளை பெற்ற பின்னர், வீடு திரும்புவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் காயங்களுக்குள்ளாகியவர்களில் ஆண்கள் 40 பேரும், பெண்கள் 32 பேரும் அடங்குகின்றனர்.




