பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மலையக அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைக்காக பசில் ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த ஆட்சிக்காலத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்புக்காக 300 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக மஹிந்த பாலசூரிய அழைக்கப்பட்டுள்ளார்.