ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது

🕔 September 9, 2016

Heroin - 098ந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு – இவரைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்திருந்தார். 1.4 கிலோகிராம் எடையுடைய ஹோரோயின் போதைப்பொருளை, பொலித்தீனில் வைத்து தனது இடுப்புப் பகுதியில் மறைத்திருந்தார்.

இவர் ஒரு வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தேக நபர் நீர்கோழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 07 நாட்கள் தடுத்து வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரிப்பதற்கு – நீதிமன்றம் அனுமதியளித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்