ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை

🕔 September 2, 2016

Judgement - 01னாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

பதினேழு வயதுடைய மாணவரும், 26 வயதுடைய இளைஞரும், மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, மேற்படி இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களில் மாணவரை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலும், இளைஞரை சிறைச்சாலையிலும், இன்று வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்