முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 July 7, 2016

Musammil - 09877தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி முஸம்மில் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான 6.1 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததோடு, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முன்னைய ஆட்சியில் துஷ்பிரயோகம் செய்ததாகவும் முஸம்மில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்