சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

🕔 June 15, 2016

– எப். முபாரக் –

று வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின்  ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 39 மற்றும் 17 வயதுடைய இரு பௌத்த துறவிகளால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்படி துறவிச் சிறுவன் தனது பெற்றோரிடம் – தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, பெற்றோர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதன் அடிப்படையில், நேற்று செவ்வாய்கிழமை சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸார், நேற்றைய தினமே நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போதே, மேற்படி இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட  துறவிச் சிறுவன்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்