கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

🕔 June 11, 2016

Gottabaya rajapaksa - 866யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளராக தான் செயற்பட்ட காலத்தில் மேற்படி முகாம்களின் ஆயுதக் கிடங்குகள் வெடித்திருந்தால், ராணுவ தளபதி பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது தன்னால் நீக்கப்பட்டிருப்பார் என கோத்தபாய கருத்து வெளியிட்டிருந்தார்.

கோட்டாவின் கருத்து ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், ராணுத்தின் உயர் அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

கோட்டாபா ராணுவத்தில் செயற்பட்ட காலப்பகுதியில், யுத்தத்திற்கு பயந்து தப்பி சென்று வெளிநாட்டில் வசித்ததாக ராணுவத்தின் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் வவுனியா மற்றும் கரடியனாறு ராணுவ முகாமினுள் இருந்த ஆயுத கிடங்குகள் வெடித்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் தற்போது பேசுவதனை போன்று எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்