வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

🕔 June 4, 2016

Hakeem -Malwana - 04
வெ
ள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மல்வானை பிரதேசத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.

அதன்போதே, மேற்படி நிவாரணம் பொருட்களை மக்களிடம் கையளித்தார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களின் தேவைப்பாடுகளை கண்டறியும் நோக்கில் மல்வானை, உலகிட்டிவல மற்றும் ரக்க்ஷபான போன்ற பிரதேசங்களுக்கும் இதன்போது அவர் சென்றார்.

ரக்ஷபான பள்ளிவாசலுக்குச் சென்ற அமைச்சர் ரஊப் ஹக்கீம், பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் சம்பந்தமாக, பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.Hakeem -Malwana - 05 Hakeem -Malwana - 02 Hakeem -Malwana - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்