வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

🕔 May 31, 2016

GMOA - 0909ரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடபெறுகிறது.

அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்திருந்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

எனினும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்தப் போராட்டத்தை நடத்துவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தாய் சேய் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த நேரிடும் எனவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஓர் கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

எனினும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தாய் சேய் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த நேரிடும் எனவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்