மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு

🕔 May 29, 2016

Kepler 62f - 01னிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நாம் வாழுகின்ற பூமியில் இருந்து மேற்படி புதிய பூமியானது, சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2009 ஆம் ஆண்டில் கெப்ளர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.

அந்த வரிசையில் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்துக்கு கெப்ளர் 62எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாகும்.

பூமியில் 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. கெப்ளர் 62எப் கிரகத்திலும் இதேயளவ கார்பைன் டை ஆக்ஸைடு இருப்பதாக கருதப்படுகிறது.

“அந்த கிரகத்தில் பாறைகளும் கடல்களும் இருக்கக்கூடும். அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, நிச்சயமாக அங்கு மனிதன் உயிர் வாழ முடியும்” என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

கெப்ளர் 62எப் கிரகமும், மேலும் 04 கிரகங்களும் சூரியனைப் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த பெரிய நட்சத்திரம் சூரியனைவிட சிறியதாகவும் வெப்பம் குறைந்ததாகவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பூமியை போன்ற சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கெப்ளர் 62எப் கிரகமானது, மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

எனவே அந்த கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் ‘சூப்பர் பூமி’ என்று செல்லமாக அழைக்கின்றனர். புதிய பூமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்