முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

🕔 April 10, 2016

Trishaw - 01– க. கிஷாந்தன் –

முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

பதுளை பகுதியின் தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவரின் முச்சக்கர வண்டியில் தேவைக்கு அதிகமாக அலங்காரங்களை ஏற்படுத்தி, அதில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒலி பெருக்கியை அதிக இரைச்சலுடன் ஒலிக்க விட்டமையினால், வண்டியில் பயணிக்கின்றவர்களும், பாதையில் நடமாடும் பொதுமக்களும் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கியமை தொடர்பாகவே சாரதி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்