உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

🕔 March 23, 2016

Hasan Ali - 097– எம்.சி. நஜி­முதீன் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய மநாட்டில் கலந்­து­கொள்­ளமை தொடர்பில் கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

“கட்­சியின் தேசிய மாநாட்­டின்­போது தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் ஆற்­றிய உரையில்இ தேசிய மாநாட்டில் கலந்­து­கொள்­ளா­த­வர்கள் பற்றி மிகவும் மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார். பகி­ரங்­க­மாக நடை­பெற்ற தேசிய மாநாட்டில் அவ்­வா­றான வார்த்தைப் பிர­யோ­கங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை.

எனினும் தலைவர் ஹக்கீம் கட்­சிக்குள் பிரச்­சினை ஏதும் இருந்தால் அது தொடர்பில் கட்­சிக்­குள்­ளேயே பேசி தீர்வு காண வேண்டும் என தற்­போது ஊட­கங்கள் மூலம் தெரி­விக்­கிறார். ஆனால் அவர் அதனை முதலில் செய்­தி­ருக்க வேண்டும். அவர் அதனை செய்­தி­ருந்தால் வர­வேற்­கத்­தக்க விட­ய­மாக இருந்­தி­ருக்கும். எனினும் அவர் பிரச்­சினை தொடர்பில் கட்­சிக்குள் பேசி தீர்வு காணாமல்இ அதனை தேசிய மாநாட்டில் பகி­ரங்­க­மாகப் பேசி வீண் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேலும் தேசி­யப்­பட்­டியல் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­ப­டா­மை­யி­னால்தான்இ நான் அதி­ருப்­தி­ய­டை­துள்­ள­தாக தவ­றான கருத்­தொன்று பரப்­ப­பட்­டுள்­ளது. ஆனாலும் யதார்த்தம் அது­வல்ல. கட்­சியின் செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ர­ஙகள் குறைக்­கப்­பட்­ட­மையே அதி­ருப்­திக்­கான பின்­ன­ணி­யாகும். மேலும் பொதுச்­செ­ய­லா­ளரின் அதி­காரக் குறைப்­பா­னது தலை­வரின் தனிப்­பட்ட செயற்­பா­டாகும். ஏனெனில் அதி­காரக் குறைப்பு தொடர்பில் என்­னி­டமோஇ வேறு உறுப்­பி­னர்­க­ளி­டமோ உயர்­பீ­டத்­தி­டமோ ஆலோ­சிக்­காமல் தலைவர் அதனை மேற்­கொண்­டுள்ளார்.

தேசிய மநாட்டில் கலந்­து­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் உயர்­பீடம் தீர்­மா­னிக்கும் என தலைவர் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வா­றாயின் கட்சிச் செய­லா­ளரின் அதி­காரக் குறைப்பு தொடர்பில் உயர்­பீ­டத்தின் ஆலோ­சனை பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் அத­னையும் அவர் செய்­ய­வில்லை. மேலும் செய­லா­ளரின் அதி­காரக் குறைப்­பக்கு எதி­ராக குரல்­கொ­டுத்­த­வர்­களும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

கட்­சியின் தேசிய மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன்னர் சம­ரசப் பேச்­சு­வார்­ததை நடை­பெற்­றது. அதன் பிர­தி­ப­ல­னாக செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்ளை மீளவும் வழங்­கு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பிர­தி­நி­யொ­ரு­வ­ரையும் தலைவர் நிய­மித்தார். எனினும் அந்தப் பிர­தி­நிதி இரு தினங்­களின் பின்னர் என்னை தொடர்பு கொண்டு ‘கட்­சியின் உயர்­பீடச் செய­லாளர் பத­வி­யினை தாங்கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா’ என வின­வினார். ஆனால் அந்தப் பத­வியில் இருப்பர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. ஆகவே அப்­ப­த­வியை பொறுப்­பேற்க என்னை வேண்­டிக்­கொண்­டமை தொர்பில் எனக்கு அதி­ருப்தி உள்­ளது.

எனவே இவ்­வா­றான கார­ணங்­க­ளி­னால்தான்இ நான் தேசிய மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை. அதனை விடுத்து தற்­போது தேசி­யப்­பட்­டியல் விவ­கா­ரத்தை மாத்­திரம் காரணம் காட்ட முனை­வது தவ­றான வழி­மு­றை­யாகும். இதே­வேளை தேசி­யப்­பட்­டியல் பிர­தி­நி­தித்­து­வத்தை எனக்கு வழங்­கு­வ­தற்­கான நோக்கம் இல்­லை­யெனில்இ ஏன் என்னை தேசி­யப்­பட்­டி­யலில் பெயர் குறிப்­பிட வேண்டும். அதனை விடுத்து தேர்­தலில் கள­மி­றக்­கி­யி­ருக்­கலாம். அத­னையும் தலைமை செய்­ய­வில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கடந்த காலங்­களை மீள்­ப­ரி­சீ­லனை செய்­து­கொண்டு பய­ணிக்க வேண்டியுள்ளது. கட்சியின் முன்னால் பாரிய பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளை பிரதானப்படுத்தியே ஒவ்வொரு செயற்பாடும் அமைய வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தினூடாக இன்பிரச்சினை உட்பட ஏராளமான பிரச்சினைகளுக்க தீர்வு காண வேண்டியுள்ளது. மேலும் அரசியலமைப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவெடுத்து செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான முரண்பாடுகளினால் கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்