பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 March 23, 2016

Pilliayan - 01476கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது, நீதவான் எம்.எஸ். கணேசராஜா இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிணைமனுக் கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்