
அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாயவுக்கு அருகில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட பிக்குகளுடன் ஏற்பட்ட மோதலின் போது – தாக்கப்பட்ட ராஜாங்கனயே சத்தாரத்தன தேரர், தனது தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், மீண்டும் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் தான் அனுராதபுரத்திற்குத் திரும்பி வருவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தனக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட வேளையில் உதவிய வைத்தியப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.



