தலைப்புச் செய்திகள்

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 07 பேருக்கு விளக்கமறியல்: மனநல பரிசோதனை நடத்துமாறும் உத்தரவு

பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட ஏழு பேரை நவம்பர் 26-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் கஸ்ஸப தேரருடன் மேலும் மூன்று பௌத்த பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுக்கு மனநலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், அவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

ராஜங்கனே சத்தாரத்தன தேரர் தலைமையிலான குழுவினருக்கும்,கஸ்ஸப தேரர் மற்றும் அவரது குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அவர்களை நேற்று (12) பொலிஸார் கைது செய்தனர்.