
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஒக்டோபர் மாதத்தில் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தத் தொகையானது இலங்கைப் பெறுமதியில் சுமார் 24490 கோடி ரூபாயாகும்.
இது முந்தைய மாதத்துடனும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடனும் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள்’ அறிக்கையின்படி, செப்டம்பர் 2026 இல் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த பணப்பரிமாற்றங்கள், ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளன.
இந்தத் தொகையானது, 2025 ஒக்டோபரில் பதிவான 712 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 23.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம் ஆகும்.
இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பணப்பரிமாற்ற வரவுகளில் சுமார் 3.3 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் அந்நியச் செலாவணியின் முக்கியமான ஆதாரமாகத் தொடர்ந்து விளங்குவதுடன், நாட்டின் வெளிநாட்டு நிதி நிலைக்குப் பங்களிப்பையும் வழங்குகின்றன.



