தலைப்புச் செய்திகள்

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.

தேரரை நேற்றுக் கைது செய்த மட்டக்களப்பு பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பிலுள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில் கடமையிலிருந்த உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே சுமன ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்.