தலைப்புச் செய்திகள்

பெண்கள், சிறுவர்களின் ஆபாசப் படங்களை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட 21 வயது இளைஞன் கைது

பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் 21 வயது இளைஞன் ஒருவனை நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், ஒரு பேஸ்புக் பக்கத்தையும், குழுவையும் இயக்கி, அதன் மூலம் அந்தப் படங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

பெலியத்த பகுதியைச் சேர்ந்த அந்த சந்தேக நபரை, சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறையைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவு கைது செய்தது.

விசாரணையின் நிமித்தம் சந்தேக நபரின் கைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.