
60 வயதை எட்டிய, நன்னடத்தையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் தற்போதுள்ள பணி வெற்றிடங்கள் குறித்து, எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும்போது, அமைச்சர் இதனைக் கூறினார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலிருந்து 10,000 பணியாளர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களத்தில் மனிதவளப் பற்றாக்குறை நிலவுவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், இப்பிரச்சனையைச் சரிசெய்யவும், குறிப்பாக கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அதிகப்படியான பணிச்சுமையைக் குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


