
தெஹிவளை- கல்கிசை பொது மயானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் – காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் பைக்-இல் வந்த இரண்டு சந்தேக நபர்கள், தெஹிவளை – கல்கிசை பொது மயானத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாதிக்கப்பட்டவர், சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


