
சீன நாட்டினர் 19 பேருக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு, அவற்றை விடுவிப்பதற்காக லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை பொலிஸ் நிறைய பொறுப்பதிகாரி – வெயங்கொடவில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையவழி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 19 சீன நாட்டினரின் கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்காக, ஒரு நபருக்கு ரூ. 300,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
ராஜகிரியப் பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை, மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி தன்வசம் வைத்திருந்ததாகவும், அவற்றை விடுவிப்பதற்காகப் பணம் கோரியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்காகப் பணம் கோரும் தகவல் – ஒரு பெண் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து – இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


