
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், இன்று (26) வெளியிட்ட செய்தியின்படி, பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள மஷ்கரா கிராமத்தின் மீது நேற்று திங்கள்கிழமை இரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, பெக்கா பள்ளத்தாக்கிலும் தெற்கு லெபனான் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புத் தளங்கள் மற்றும் “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மேலும் தீவிரமான தாக்குதல்களை நடத்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்கள் நடந்தன. இஸ்ரேல் – லெபனானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுலிலுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாக்கதலில் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால், இறுதி உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. அகழ்வு இயந்திரங்கள் இடிபாடுகளை இன்னும் தோண்டி வருகின்றன கூறப்படுகிறது.
இதேவேளை, தெற்கு லெபனானின் நபாட்டியா நகரில் வசிக்கும் மக்களைக் கட்டாயமாக இடம்பெயரச் செய்வதற்கான உத்தரவுகளையும் இஸ்ரேலிய ராணுவம், பிறப்பித்துள்ளது.


