
பதினான்கு (14) கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ என்ற போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை -கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (18) செய்தனர்.
சந்தேக நபர்கள் காலை சுமார் 9.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பாங்கொக்கிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தனர்.
இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.562 கிலோ குஷ் போதைப்பொருளை இதன்போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த போதைப்பொருள் 28 பொட்டலங்களாக கவனமாக கட்டப்பட்டு, ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு – தெமட்டகொடவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் 23 வயதான மதுக்கடை ஊழியர், மற்றவர் 30 வயதான நட்டாமை.
மேலதிக விசாரணைக்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


