
இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜூன் 30, 2025 நிலவரப்படி, நாடு தழுவிய 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவற்றில் 818,869 வழக்குகள் நீதவான் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்றங்களில் 260,007 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 5,396 வழக்குகளும் தீர்வுக்காகக் காத்திருக்கின்றன.

மேல்முறையீட்டு நீதிமன்றம் 5,216 வழக்குகளையும், சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றம் 6,591 வழக்குகளையும், வர்த்தக மேல் நீதிமன்றம் 6,330 வழக்குகளையும், மேல் நீதிமன்றத்தில் (குற்றவியல்) 27,376 வழக்குகளையும் நிலுவையில் கொண்டுள்ளன.
சிறுவர் நீதிமன்றங்களில் 1,556 வழக்குகளும், தொழிலாளர் தீர்ப்பாயங்களில் 3,131 வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. மேலும், 65 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தீர்வுக்காகக் காத்திருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


