தலைப்புச் செய்திகள்

தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பண மோசடி குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம்

லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் – பண மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லேக் ஹவுஸ் நிர்வாகம் – இவருக்கான பணி இடைநீக்க கடிதத்தை நேற்று (13) வழங்கியதாக தினகரன் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினகரன் பத்திரிகையில் விளம்பரம் பிரசுரிப்பதற்காக வருவோரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, விளம்பரம் வெளியிடாமல் – அதற்குப் பதிலாக குறித்த விளம்பர உள்ளடக்கங்களைக் கொண்டு செய்திகளை வெளியிட்டார் என்றும், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 65 லட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியாக அவர் பெற்றுளார் எனத் தெரியவந்துள்ளதாகவும் தினகரன் வட்டாரங்கள் கூறின.

இவ் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் லேக் ஹவுஸ் நிர்வாகம் முறையிடவுள்ளதாகவும் தினகரன் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.