
ஈரானின் தலைநகரில் போரினால் சேதமடைந்த இடங்களில் சுமார் 80 சதவீதம் புனரமைக்கப்பட்டு விட்டதாக ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒலிபரப்பு நிறுவனம் (IRIB) தெரிவித்துள்ளது.
“டெஹ்ரான் மாகாணத்தில் 60,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் அமெரிக்க-சியோனிசத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன” என்று டெஹ்ரானின் துணை ஆளுநர் சையத் கமாலெடின் மிர்ஜஃபாரியன் கூறினார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் சுமார் 270 பில்லியன் டொலர் மதிப்பிலான நேரடி மற்றும் மறைமுக சேதங்களைச் சந்தித்துள்ளதாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே வலையமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நேரடியாகத் தாக்கப்பட்டன.
அதே நேரத்தில், ஏராளமான வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன.


