
ஈரானின் சொத்துக்கள் உலகளவில் சுமார் 100 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகளவில் முடக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இது இலங்கைப் பெறுமதியில் 31 லட்சத்து 46 ஆயிரத்து 654 கோடி ரூபாயாகும்.
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பல நாடுகளின் வசம் உள்ளன.
அதன்படி – ஜப்பான் சுமார் 1.5 பில்லியன் டொலரையும், ஈராக் சுமார் 6 பில்லியன் டொலரையும், சீனா குறைந்தபட்சம் 20 பில்லியன் டொலரையும், இந்தியா 7 பில்லியன் டொலரையும் கொண்டுள்ளன.

அமெரிக்கா சுமார் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை நேரடியாக முடக்கியுள்ளது. அதே நேரத்தில் லக்சம்பர்க் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளன.
ஈரானுக்குச் செலுத்துவதற்காக தென் கொரியாவிலிருந்து அனுப்பப்பட்டு, பின்னர் அமெரிக்காவால் தடுக்கப்பட்ட சுமார் 6 பில்லியன் டொலர் தொகையை கத்தார் கொண்டுள்ளது.
1979ஆம் ஆண்டு முதல் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளும் சொத்து முடக்கமும் அமுலில் உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இம்மாதம் 10ஆம் திகதி – பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, முடக்கப்பட்ட தமது சொத்துக்கள் மற்றும் நிதிகளை விடுவிக்குமாறு, ஈரான் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



