தலைப்புச் செய்திகள்

நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், யாரும் கண்டிராத தாக்குதல் தொடங்கும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் ஏதேனும் ஒரு காரணத்தால் யுத்த நிறுத்தத்துக்காக ஒப்புக் கொண்ட நிபந்தைனைகளை நிறைவேற்றத் தவறினால், அப்போது, ​​இதுவரை யாரும் கண்டிராத அளவுக்குப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் தாக்குதல் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அவருடைய ரூத் சமூகத்தளத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

‘ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் – ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்த எதிரியை, கொன்று குவித்து அழிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், மற்றும் ராணுவ வீரர்கள், மேலதிக வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிறவற்றுடன், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.

ஏதேனும் ஒரு காரணத்தால் அது நிறைவேற்றப்படாவிட்டால், (அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு), அப்போது, ​​இதுவரை யாரும் கண்டிராத அளவுக்குப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் தாக்குதல் தொடங்கும்.

அணு ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது என்றும், ஹோர்முஸ் நீரிணையை திறப்பதெனவும், இதற்கு மாறான அனைத்துப் போலியான சொல்லாடல்களையும் மீறி, வெகு காலத்திற்கு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களைத் தயார் செய்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது’ என, அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.