தலைப்புச் செய்திகள்

போர் நிறுத்த நிபந்தனையை இஸ்ரேல் மீறுகிறதா?

ஈரானுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

ஆனாலும் போர் நிறுத்த மத்தியஸ்தரான பாகிஸ்தான், இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் என்று கூறியிருந்தது.

ஆனாலும், ஹிஸ்புல்லாவிற்கு எதிரான போரைத் தொடரும் அதே வேளையில், ஈரான் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மதிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான போரில், சண்டையையும் தரைவழி நடவடிக்கைகளையும் தொடர்வதாக, இஸ்ரேலிய ராணுவமும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.