
எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை தவிர, அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக ஐநா கடல் சார்ந்த
48 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீதனையை திறக்கக வேண்டுடிமன அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை முற்றிலுமாக மூடப்படும் என ஈரானிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
எந்தவித நிபந்தனையும் இன்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாக அழித்து விடுவோம் என அமெரிக்கா ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
இந்தக் காலக்கெடு முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில்’, ஈரானும் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.
தங்களின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களுக்கு மின்விநியோகம் செய்யும் முக்கிய கட்டமைப்புகளை தகர்ப்போம் என புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் அமெரிக்கர்கள் பங்குதாரர்களாகவுள்ள பொருளாதார தொழில்துறை மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைப்போம் என்றும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் அச்சுறுத்தலால் – உலக அளவில் நெருக்கடி சூழல் எழுந்துள்ள நிலையில், ஈரான் போர் ட்டரம்பின் கையை மீறிச் சென்று விட்டதாக சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக ஐநா கடல் சார் அமைப்பின் ஈரான் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் தரவுகளின் படி, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் – மார்ச் 18ஆம் திகதி வரை’, சுமார் 21 கப்பல்கள் ஹோர்முஸ் நீரினை வழிதடத்தில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


