
அரச நிலத்தை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடியாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக – முன்னாள் அமைச்சர்கள் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பலருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இன்று (27) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிகைகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர்களைத் தவிர – சரத் எதிரிசிங்க, அஜித் மில்ராய், ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரக்கோன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் பிணையில் விடுவித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயன செனவிரட்ன, வழக்கை மார்ச் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.


