தலைப்புச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (03) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.

சிரிலிய நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2026 ஜனவரி 27 ஆம் திகதி வாக்குமூலம் வழங்க வருமாறு, அவருக்கு அழைப்ப விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், அவர் தனது சட்டத்தரணி மூலம், அன்றைய தினம் ஆஜராக முடியாது என்று பொலிஸாருக்குத் தெரிவித்து, இரண்டு வார கால நீடிப்பு கோரினார்.

இருப்பினும், இன்று (03) காலை ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.