தலைப்புச் செய்திகள்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர், விமான விபத்தில் பலி

ந்தியா – மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தொன்றில் சிக்சி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 66 வயதாகிறது.

சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரின் தனிப்பட்ட உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.

இவர்கள் அனைவரும் – மேற்படி விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான நான்கு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொருட்டு, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்த போது, விபத்து நடந்துள்ளது.

பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது, விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்து இன்று (28) காலை 8:48 மணிக்கு நடந்தது.

இந்த விமானம் VTSSK, LJ45 வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும்.