தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பியினரின் சம்பளம் ஒரே வங்கிக் கணக்குக்கு செல்கின்றனவா: விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் – குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழல் மோசடிக்கு சமமானதாகவும் கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி உதய கம்மன்பில லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இது குறித்து முறையிட்டார்.