தலைப்புச் செய்திகள்

கார் – வேன் மோதி 03 பேர் மரணம் 08 பேர் வைத்தியசாலையில்

முந்தல் பகுதியில் இன்று (2) காலை நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், எதிர் திசையில் சென்ற காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேனில் இருந்த ஒன்பது பேரில் ஏழு பேர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.