தலைப்புச் செய்திகள்

கள்ளச் சாராயம் அருந்திய ஐவர் மரணம்

சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் வென்னப்புவ – வைக்கல பகுதியில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வீட்டிற்குள் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன என்றும், அதே நேரத்தில் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு பேர் உயிரிழந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.