
2025ஆம் ஆண்டில் மொத்தம் 03 லட்சத்து 12,177 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், அவற்றின் எண்ணிக்கை 02 லட்சத்து 23,228 என்றும் JB Securities (Pvt) Ltd தெரிவித்துள்ளது.
2023 நொவம்பர் முதல் 2025 நொவம்பர் வரையிலான வாகனப் பதிவுகள் தொடர்பான நிறுவனத்தின் பகுப்பாய்வில், 2024 உடன் ஒப்பிடும்போது 2025 இல் பதிவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 22,381 மோட்டார் கார்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2024 இல் வெறும் 823 வாகனங்களாக இருந்தன.

பிரீமியம், ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனப் பிரிவுகளின் வளர்ச்சியையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2025 இல் மொத்தம் 985 பிரீமியம் பயணிகள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே நேரத்தில் 16,071 ஹைப்ரிட் வாகனங்களும் 36,501 மின்சார வாகனங்களும் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்டன.
இதேவேளை, முச்சக்கர வண்டிகள் வியத்தகு உயர்வைக் காட்டுகின்றன. 2024 இல் 08ஆக இருந்த நிலையில், 2025 இல் 13,768 பதிவு செய்யப்பட்டன. மேலும் பஸ் பதிவுகள் 2024இல் 121 இலிருந்து 2025 இல் 722 ஆக அதிகரித்தன.


