தலைப்புச் செய்திகள்

அமெரிக்காவினால் வெனிசுவெலா வருமானமீட்டும்: ட்ரம்ப் தெரிவிப்பு

வெனிசுவெலா நாட்டுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வெனிசுவெலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாக முற்றிலும் சரிந்துள்ளது. எடுக்க முடிந்த எண்ணெய் அளவுடன் ஒப்பிட்டால், மிகவும் குறைவான எண்ணெய்தான எடுக்கப்பட்டு வந்தது.

மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அங்கு அனுப்பவுள்ளோம். அவர்கள் பில்லியன் டொலர்களை அங்கு முதலிடுவார்கள். மிகவும் சேதமடைந்த எண்ணெய் உட்கட்டமைப்புகளை திருத்துவார்கள்.

அதன்மூலம் அந்த நாட்டுக்கு வருமானம் ஈட்டத் தொடங்குவார்கள்” என்றார்.