தலைப்புச் செய்திகள்

சதொச நிறுவனத்தின் போக்குவரத்துக்கான முன்னாள் முகாமையாளர் கைது

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால, நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனமென்றை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெனாண்டோ சம்பந்தப்பட்ட சம்பவத்துடன் இந்த கைது தொடர்புடையது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்த உதவிய குற்றச்சாட்டில் இந்திக ரத்னமலால கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், ஜொஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டு, ஜனவரி 09ஆம் திகதி வரை பல குற்றச்சாட்டுகளின் பேரில் வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜோன்சன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி மற்றும் பிற வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உட்பட – பல குற்றச்சாட்டுகளின் பேரில், ஜொஹான் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.