
சுவிசர்லாந்தின் சொகுசு நகரமான ‘கிரான்ஸ் மொன்டானா’வில் உள்ள நெரிசலான பா(B)ரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியபோது, ’லெ கான்ஸ்டெல்லேஷன்’ என்ற பா(B)ரில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர், மேலும் பலர் காயமடைந்து பலர் இறந்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த பொலிஸார் மறுத்துவிட்டனர். ஆனால் பலர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், குறைந்தது 10 பேர் இறந்ததாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சில உள்ளூர் ஊடகங்கள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளன.
முன்னதாக, இது ஒரு குண்டு வெப்பு என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், இது ஒரு தீ விபத்து என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


