
மாவனல்ல – நஹிந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால்தால் தாக்குதலுக்குள்ளான இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் 119 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனையடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரை பொலஸார் கைது செய்துள்ளனர் அததெரண செய்தி வெளியிட்டுள்ளது.


