தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸை அடுத்த வருடம் வரை, விளக்க மறியயலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை – ஜனவரி 9, 2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட துப்பாக்கி – ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், டக்ளஸை கைது செய்தனர்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை ராணுவத்தினர் – அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கினர்.

அந்தத் துப்பாக்கி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவர் விசாரணைக்கு உட்பட்ட பின்னர், 219ஆம் ஆண்டு காட்டுப் பகுதியொன்றில் மீட்கப்பட்டது.

ஆயுதத்தின் தொடர் எண்ணை ஆய்வு செய்தபோது, ​​சம்பந்தப்பட்ட துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவை சிஐடி பெற்றது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை ராணுவத்தால் வழங்கப்பட்ட மேலதிக துப்பாக்கிகள் குறித்தும் சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து சிஐடி விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.