தலைப்புச் செய்திகள்

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரரின் கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைத் தேடுவதாக, மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹிரு செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில், மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்யுமாறு, பகிரங்க பிடியாணை நேற்று (15) பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி – ஊடகங்களிடம் பேசிய மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரர், இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டடார்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசியமைக்க எதிராக, சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாடு தொடர்பிலேயே சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.