தலைப்புச் செய்திகள்

640 பாடசாலைகள் தவிர, ஏனையவை அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படும்

நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக மூடிப்பட்டிருந்த அரச பாடசாலைகள், நாளை (16) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், 640 பாடசாலைகள் நாளை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 05 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் வழமைபோல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றைய தினம் தத்தமது பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென கேட்கப்பட்டிருந்தனர்.