
பெண் வாடிக்கையாளர்கள் ஆடைகளை அணிந்து பார்க்கும் ‘ஃபிட்டிங்’ அறைக்குள் கெமராவை மறைத்து வைத்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தலவதுகொட உள்ளாடை கடை உரிமையாளர் நேற்று (08) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த ஆடை அணிந்து பார்க்கும் அறையில் வைக்கப்பட்ட கமராவை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபரின் கைத்தொலைபேசியை செய்ததில், ஃபிட்டிங் அறையைப் பயன்படுத்திய பெண்கள் மற்றும் யுவதிகள் சம்பந்தப்பட்ட 201 வீடியோகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்சிகள் ஆன்லைனில் பரப்பப்பட்டதா அல்லது விற்கப்பட்டதா என்பதை, செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டார்.


