
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (08) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இரவு 11.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். இதன்படி ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ (Amber alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பாதகமான வானிலையால் ஏற்படும் சேத அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



