தலைப்புச் செய்திகள்

பதில் பிரதம நீதியரசர் நியமனம்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.