தலைப்புச் செய்திகள்

ஐக்கிய அரபு ராஜியத்தின் உதவிப் பொருள்களுடன் 07ஆவது விமானம் வந்தது

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு ராஜியம் (UAE) அனுப்பிய 07ஆவது மனிதாபிமான உதவி விமானம் இன்று (09) நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாக, இலங்கைக்கான ஐக்கிய அரபு ராஜிய தூதரகம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்கள் அடங்கும். அந்த வகையில் 89 தொன் நிறையுள்ள பொருட்களை, ஐக்கிய அரபு ராஜியம் கொடுத்து உதவியுள்ளது.

ஐக்கிய அரபு ராஜியத்தின் களப் பணியாளர்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 உடல்களை வெற்றிகரமாக மீட்டனர் என்றும், பாதிக்கப்பட்ட 08 பேருக்கு கள வைத்திய சிகிச்சையை வழங்கியதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.